மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை: பிரேமலதா விஜயகாந்த் 

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை: பிரேமலதா விஜயகாந்த் 

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு பயமில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி -

திமுக, அதிமுக என இருதரப்பிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது. தேமுதிக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. குழப்பமும் இல்லை. ஓரிரு நாட்களில் தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. சாதாரணமான விவகாரத்தை சூழ்ச்சி மூலமாக திமுக பூதாகரமாக்கிவிட்டது. 

துரைமுருகனை எங்கள் கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தனர். தேமுதிகவினர் துரைமுருகனை சந்திக்கும் முன் வராத ஊடகங்கள், அவரை சந்தித்த பின்னர், வந்தது எப்படி? துரைமுருகனை எதற்காக வேண்டுமானாலும் சந்தித்திருந்தாலும், இதை வெளியில் சொல்லலாமா? திமுகவை பற்றி சுதீஷிடம் துரைமுருகன் பேசியது குறித்து முதலில் விளக்கம் அளிக்க வேண்டும். தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எது நாகரிகம் என்பதை செய்தியாளர்களும், எதிர்தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். 

விஜயகாந்துடனான சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்று ஸ்டாலின் முதலில் சொல்ல வேண்டும். யார் என்றே தெரியவில்லை என கூறும் துரைமுருகன், தேமுதிக நிர்வாகிகளை வீட்டில் அனுமதித்தது எப்படி? மணப்பெண் இருந்தால் பத்து பேர் பெண் கேட்டுதான் வருவார்கள், அதுபோலதான் தேர்தல் நேரத்திலும். தேமுதிகவின் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தேமுதிகவின் நிலை என்ன? யாரோடு கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதை விரைவில் சொல்வோம். கடந்த தேர்தலில் அதிமுகவில் 37 எம்பிக்கள் வெற்றிபெற்றும் தமிழகத்துக்கு என்ன நன்மை கிடைத்தது? 

ஆக்கப் பொறுத்துவிட்டீர்கள், ஆறப் பொறுங்கள். செய்தியாளர்கள் 24 மணி நேரமும் தேமுதிக அலுவலகம் முன் நின்றால் நாங்கள் பதிலளிக்க முடியாது. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வரா என்பதை, தேர்தல் கூட்டணி முடிவான பிறகு பாருங்கள். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு எந்தப் பயமும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com