திமுக, காங்கிரஸ் இடையே போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது 

திமுக, காங்கிரஸ் இடையே போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்தானது.  
திமுக, காங்கிரஸ் இடையே போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது 


திமுக, காங்கிரஸ் இடையே போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்தானது.  

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்தல் தேதி வெளியானதை அடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை திமுக, காங்கிரஸ் இடையே நடைபெற்று வந்தது. 

இந்த பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் போட்டியிடும் தொகுதிகள் குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதற்கான ஒப்பந்தமும் திமுக, காங்கிரஸ் இடையே கையெழுத்தானது. 

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தெரிவிக்கையில், 

"திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இனிமையாக நிறைவடைந்துள்ளது. போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் நாளை அறிவிப்பார். வரும் 15 மற்றும் 16 தேதிகளில் விருப்பமனு பெறப்படுகிறது. அதன்பிறகு, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 

ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல. அவர் பதவியை நேசிக்காத அன்பான தலைவர். அவர் நினைத்திருந்தால் 2009-இல் பிரதமராக வந்திருக்க முடியும். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அவர் நேர்மறையாக தான் பேசினார். 

மொழிபெயர்ப்பு என்பதை தவறாக புரிந்துகொண்டு உள்ளீர்கள். மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல. என்னை பொறுத்தவரை ராகுல் என்ன சொல்ல விரும்பினாரோ அது மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com