தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ராமதாஸ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று காலை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ராமதாஸ்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று காலை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். 

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக - 7, பாஜக - 5, தேமுதிக- 4, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. 

தொகுதிப் பங்கீடு முடிந்தாலும் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று காலை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது விஜயகாந்த்திடம் உடல்நலம் குறித்து ராமதாஸ் கேட்டறிந்தார். ராமதாஸ் உடன் அன்புமணி, ஜிகே மணி, அமைச்சர்கள் உள்ளிட்டோரும் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com