மக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

சென்னை: 17-வது மக்களவைத் தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 
மக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

சென்னை: 17-வது மக்களவைத் தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி ஒரு தொகுதியை சேர்த்து 10 தொகுதிகளும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 1 தொகுதியும் (ஒரு மாநிலங்களவை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும், கொமதேகவுக்கு 1 தொகுதியும், ஐஜேகேவுக்கு 1 தொகுதிகள் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார். தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் தங்களுடைய வேட்பாளர் பெயர்களை அறிவித்துள்ளனர். 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை திங்கள்கிழமை அல்லது நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

திமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியல் விவரம்
* வட சென்னை - கலாநிதி வீராசாமி
* தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
* மத்திய சென்னை - தயாநிதி மாறன்
* ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
* காஞ்சிபுரம்(தனி) - செல்வம்
* அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
* வேலூர் - கதிர் ஆனந்த்
* தருமபுரி - டாக்டர் எஸ்.செந்தில்குமார்
* திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை
* கள்ளக்குறிச்சி - கவுதமசிகாமணி
* சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன்
* நீலகிரி (தனி) - ஆ.ராசா
* பொள்ளாச்சி - குல.சண்முகசுந்தரம்
* திண்டுக்கல் - வேலுச்சாமி
* கடலூர் - டி.ஆர்.வி. ரமேஷ்
* மயிலாடுதுறை - செ.ராமலிங்கம் அல்லது ஜெகவீரபாண்டியன்
* தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
* தூத்துக்குடி - கனிமொழி
* தென்காசி(தனி) - தனுஷ்குமார்
* திருநெல்வேலி - ஞானதிரவியம்

சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்: 
* பூந்தமல்லி - ஆ. கிருஷ்ணசாமி
* பெரம்பூர் - ஆர்.டி. சேகர்
* திருப்போரூர் - எஸ்.ஆர். எல். இதயவர்மன்
* சோளிங்கர் - அ. அசோகன்
* குடியாத்தம் - எஸ். காத்தவராயன்
* ஆம்பூர் - அ.செ. விஸ்வநாதன்
* ஓசூர் - எஸ்.ஏ. சத்யா
* பாப்பிரெட்டிப்பட்டி - ஆ. மணி
* அரூர் - செ. கிருஷ்ணகுமார்
* நிலக்கோட்டை - சி. சவுந்திரபாண்டியன்
* திருவாரூர் - பூண்டி கே. கலைவாணன்
* தஞ்சாவூர் - டி.கே.ஜி. நீலமேகம்
* மானாமதுரை - கரு. காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்
* ஆண்டிப்பட்டி. ஏ. மகாராஜன்
* பெரியகுளம் - கே.எஸ். சரவணகுமார்
* சாத்தூர் - எஸ்.வி. சீனிவாசன்
* பரமக்குடி - ச. சம்பத்குமார்
* விளாத்திகுளம் - ஏ.சி. ஜெயக்குமார்
* புதுச்சேரி தட்டான்சாவடி: கே.வெங்கடேசன் 

வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக, வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com