வருகிறது புதிய வசதி: ரயில் புறப்பட 4 மணி நேரம் முன்பு ரயில் ஏறும் இடத்தை மாற்றலாம்

ரயில் பயணிகளுக்கு மேலும் ஒரு வசதியை ஏற்படுத்த முன் வந்திருக்கிறது இந்திய ரயில்வே.
வருகிறது புதிய வசதி: ரயில் புறப்பட 4 மணி நேரம் முன்பு ரயில் ஏறும் இடத்தை மாற்றலாம்

சென்னை: ரயில் பயணிகளுக்கு மேலும் ஒரு வசதியை ஏற்படுத்த முன் வந்திருக்கிறது இந்திய ரயில்வே.

அதன்படி, விரைவு ரயிலில் பயணிக்க டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிகள், ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பே, அதாவது ரயிலில் சார்ட் தயாரிப்பதற்கு முன்பே தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்பட உள்ளது.

இந்த வசதி தத்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும்.

சில தவிர்க்க முடியாத தருணங்களில், பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பயணிகள், ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு 139 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தங்களது ரயில் எண் மற்றும் மாற்ற வேண்டிய ரயில் நிலையத்தின் தகவல்களை அளிக்கலாம். ஒருவேளை மாற்றிய ரயில் நிலையத்தில் இல்லாமல், அவர் முன்பு பதிவு செய்த ரயில் நிலையத்தில் இருந்தும் எந்தக் கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழஙகப்படாது.

இதற்கு ஏற்ற வகையில் மே 1ம் தேதிக்குள் ஐஆர்சிடிசி இணையதளத்தை மாற்றி அமைக்குமாறு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது, ஒரு பயணி, தான் ரயிலில் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாக ரயில் நிலையத்துக்கு நேரில் வந்து எழுதிக் கொடுத்துத்தான் மாற்ற முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com