நான் யாரையும் சவாலாக கருதவில்லை: வி.பி.கலைராஜன் இணைப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

டிடிவி.தினகரனை சவாலாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு நான் யாரையும் சவாலாக கருதவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
நான் யாரையும் சவாலாக கருதவில்லை: வி.பி.கலைராஜன் இணைப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் பேட்டி

டிடிவி.தினகரனை சவாலாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு நான் யாரையும் சவாலாக கருதவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தார். அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாராக வி.பி.கலைராஜன் செயல்பட்டு வந்ததார். அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் திமுக-வில் ஐக்கியமாகிய இருப்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

நான் யாரையும் சவாலாக கருதவில்லை, மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே சவாலாக கருதுகிறேன். மத்தியில் உள்ள பாஜக, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். அமமுக மட்டுமின்றி இன்னும் பல கட்சிகளில் இருந்து, பலர் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

திமுக-வில் இணைந்தது தொடர்பாக வி.பி.கலைராஜன் பேசுகையில், மு.க.ஸ்டாலின் தலைமை தான் சரியானது, அதனால் திமுகவில் இணைந்தேன். டிடிவி.தினகரனுடன் எனக்கு முரண்பாடு ஏதும் கிடையாது. அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் விரைவில் இணைவார்கள். ஸ்டாலின் சுட்டு விரல் நீட்டினால் சிட்டாக பறந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com