திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவா்கள்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

திமுகவினா் விஞ்ஞான மூளை படைத்தவர்கள் என்பதால் ஓட்டு பூத்தில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் 
திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவா்கள்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

திருப்பத்தூர்: திமுகவினா் விஞ்ஞான மூளை படைத்தவர்கள் என்பதால் ஓட்டு பூத்தில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூா்த்தியை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஹவுஸிங்போர்டு அருகில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது முதல்வர் பேசுகையில், திமுக பொய்யான வாக்குறுதி தந்தது. அதில் குறிப்பாக நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்தனர். மேலும் தினம் தினம் பொய்யான அறிக்கையை வெளியிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளது திமுக. ஆட்சியில் நாம் உள்ளோம் ஆனால் இவர்கள் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்கிறார்கள். நமது கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள வாக்குறுதிகள் முத்தான வாக்குறுதிகள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வேண்டுமென்றே பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். 

இத்தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஏற்கனவே தேர்தலில் நின்று 264 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனவே, இந்த தோ்தலில் அவருக்கு மகத்தான வெற்றி அளித்து திருவண்ணாமலை தொகுதியில் வெற்றிபெற வைத்தால், வளா்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றப்படும். புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும்.

திமுக கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இடம்பெற்றிருந்தனர் இதுவரை தமிழகத்திற்கு குறிப்பாக திருவண்ணாமலை தொகுதிக்கென்று எந்த ஒரு முன்னேற்றத்தையும், வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.

தற்போது நமது அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது அமைந்துள்ள நமது கூட்டணி மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென ஒத்த கருத்துள்ள கூட்டணி. அதிமுக வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். வளா்ச்சி பெற மேலும் பல திட்டங்கள் வகுக்கப்படும். மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள். 

தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறது. தமிழகத்தில் தற்போது கட்ட பஞ்சாயத்து கிடையாது. இந்தியா டுடே பத்திரிகை ஆய்வில் இந்தியாவிலேயே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முதலிடம் வகிக்கிறது என சான்றிதழ் அளித்துள்ளது. 

மேலும், திமுகவினா் விஞ்ஞான மூளை படைத்தவா்கள். எனவே ஓட்டு பூத்தில் இருப்பவா்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவா்களது அராஜகம் தாங்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்.

அதிமுக ஆட்சியில் தான் பெரும்பாலான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் வளம் பெற வண்டல் மண் இலவசமாக அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல முதலீட்டாளா்கள் தொழிற்சாலைகள் திறக்க முன் வருகின்றனர்.  

தற்போது திமுகவினர் அமைத்துள்ள கூட்டணி கொள்கையில்லா கூட்டணியாகும். நீண்டகால கோரிக்கையான காவிரி-கோதாவரியை இணைக்க கடுமையாக முயற்சிப்போம். 39 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளதால் பிரகாசமான வெற்றி பெற உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com