தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மீதான அவதூறு கருத்துக்கு தடை விதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மனு

 தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு கருத்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக கோரிக்கை மனு அளித்துள்ளது. 


 தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு கருத்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக கோரிக்கை மனு அளித்துள்ளது. 
இதுதொடர்பாக, அதிமுக வழக்குரைஞர் பாபுமுருகவேல் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
        கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியை இணைத்துப் பேசுவது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்  முதல்வர் பழனிசாமியை தொடர்புபடுத்தி அவதூறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
       முசிறியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வகையில் பேசியுள்ளார். தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் பெரிதும் மதிக்கத்தக்க மனிதராக விளங்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முதல்வரின் புகழுக்கும், பெருமைக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறான கருத்துகளை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கெனவே இதுபோன்று பேட்டிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் அவர் பேசியது தொடர்பாக அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
எனவே, கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியை இணைத்துப் பேச தடை விதிப்பது தொடர்பான உரிய வழிகாட்டுதல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், பிற அரசியல் கட்சியினருக்கும் தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என  பாபுமுருகவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com