சுடச்சுட

  
  PMK

   

  மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

  மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. 7 மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

  இந்நிலையில், மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாமக கோரிக்கை வைத்தது. இதையடுத்து புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக இருப்பதால் மக்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai