மக்களவைத் தேர்தலுக்காக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்தமானில் கூட்டணி அமைத்துள்ளது.
மம்தா பானர்ஜி உடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. எங்கள் இரு கட்சிகளின் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன். வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி அந்தமான் செல்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.