இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில்  மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. 
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு


தமிழகத்தில்  மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. 
தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-இல் தொடங்கியது.
இன்று நிறைவு:  வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 26) நிறைவடைகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 562-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 485 ஆண்களும், 75 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலித்தனவர் ஆவர்.
இடைத் தேர்தல் வேட்புமனுக்கள்: சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 221 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 183 ஆண்களும், 38 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 27-இல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 23-இல் எண்ணப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com