துணை முதல்வர்  நாளை கள்ளக்குறிச்சியில் பிரசாரம்

துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்ள இடங்கள் குறித்த பட்டியலை அதிமுக திங்கள்கிழமை வெளியிட்டது. 


துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்ள இடங்கள் குறித்த பட்டியலை அதிமுக திங்கள்கிழமை வெளியிட்டது. 
அதன்படி, வரும் புதன்கிழமை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். அன்றைய தினம் மாலையில் கடலூர், சிதம்பரம் தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேபோன்று, வியாழக்கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களிலும், வெள்ளிக்கிழமை கரூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம் ஆகிய தொகுதிகளிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய தொகுதிகளிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com