மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட போது வாய் தவறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.
மாம்பழம் சின்னத்துக்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்ட போது வாய் தவறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். 

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமக வேட்பாளராக ஜோதிமுத்து களத்தில் உள்ளார்.இந்நிலையில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் நேற்றைய பிரசாரத்தின்போது திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கூட்டணி குறித்தும் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர் உங்கள் ஓட்டு மாம்பழ சின்னத்துக்கே என கூறுவதற்கு பதிலாக உங்கள் ஓட்டு ஆப்பிள் சின்னத்திற்கே என கூறினார்.  இதனால் தொண்டர்கள் இடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் சுதாரித்துக்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் தனது தவறை திருத்திக் கொண்டார். முன்னதாக கடந்த வாரம் திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று உளறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com