மாமல்லபுரம் புலிக்குகைக்கு கூடுதல் நுழைவுக் கட்டணம்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

மாமல்லபுரத்தில் உள்ள புலிக்குகையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட புதன்கிழமை (மே 1) முதல் உள்நாட்டினருக்கு தலா ரூ.25, வெளிநாட்டினருக்கு தலா ரூ.300 வீதம் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தொல்லியல்
 புலிக்குகை பகுதியில் சுயப் படம் எடுக்கும் சிறுமி. 
 புலிக்குகை பகுதியில் சுயப் படம் எடுக்கும் சிறுமி. 


மாமல்லபுரத்தில் உள்ள புலிக்குகையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட புதன்கிழமை (மே 1) முதல் உள்நாட்டினருக்கு தலா ரூ.25, வெளிநாட்டினருக்கு தலா ரூ.300 வீதம் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.  
 மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், பஞ்ச ரதம், வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட உள்நாட்டினருக்கு தலா ரூ.40-ம், வெளிநாட்டினருக்கு தலா ரூ.500-ம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 
மாமல்லபுரம் அருகே தேவனேரி பகுதியில் உள்ள புலிக்குகையை சுற்றுலாப் பயணிகள் இதுவரை இலவசமாக கண்டு களித்து வந்தனர். இந்நிலையில், புலிக்குகையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட புதன்கிழமை (மே 1) முதல் உள்நாட்டினருக்கு தலா ரூ.25-ம், வெளிநாட்டினருக்கு தலா ரூ.300-ம் கூடுதலாக நுழைவுக் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 
இது குறித்து தொல்லியல் துறை அலுவலர் பரணிதரன் கூறியது: 
மாமல்லபுரம் நகரில் உள்ள சுற்றுலாப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்க இந்தியர் ஒரு நபருக்கு ரூ. 40-ம், வெளிநாட்டினர் ஒரு நபருக்கு ரூ.500-ம்  வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தேவனேரியில் உள்ள புலிக்குகையை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க கூடுதலாக இந்தியர் ஒரு நபருக்கு ரூ.25-ம், சிறுவர்களுக்கு ரூ.15-ம்,  வெளிநாட்டினர் நபர் ஒருவருக்கு ரூ.300-ம் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் புதன்கிழமை (மே 1) முதல் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்றார்.  
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியது:
சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறிய இடங்களைக்கூட தொல்லியல் துறையினர் வேலி போட்டு அடைத்துள்ளனர். குடிநீர் வசதி, இளைப்பாற நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. 
இந்நிலையில், மாமல்லபுரம் அருகில் 3 கி.மீ. தூரத்தில் தேவனேரி குப்பம் பகுதியில் புலிக்குகை உள்ளது. அதை சுற்றுலாப் பயணிகள் இதுவரை இலவசமாக கண்டுகளித்துவந்தனர். தற்போது, புலிக்குகையை பார்வையிட கூடுதல் நுழைவுக் கட்டணம் நிர்ணயித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த நுழைவுக் கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com