இணையதள வணிகத்தை தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தல்

இணையதள வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இணையதள வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற 36 -ஆவது வணிகர் தினம், சுதேசி பொருளாதார பிரகடன மாநில மாநாட்டுக்கு அமைப்பின் மாநில தலைவர் த. வெள்ளையன் தலைமை வகித்தார். அமைப்பின் மாநில பொதுச்செயலர் கே. தேவராஜ், பொருளாளர் வி. ரத்தினம், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பா. விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநாட்டுத் தீர்மானங்கள்: இந்தியாவில் வணிகம் செய்ய அந்நியரை அனுமதிக்க கூடாது. சில்லரை வணிகத்தை வீழ்த்தும் நோக்கத்தில் இணையதள வணிகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள, இணையதள வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இணையதள வணிகத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபடுவது. புத்தன்தருவை குளத்துக்கு தாமிரவருணி நீரை கொண்டு செல்லும் திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 இம்மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். வணிகர் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com