உதகையில் நிறைவடைந்தது நாய்கள் கண்காட்சி

கோடை சீசனையொட்டி உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
உதகையில் நிறைவடைந்தது நாய்கள் கண்காட்சி

கோடை சீசனையொட்டி உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
 தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் 128 மற்றும் 129-ஆவது சாம்பியன் கோப்பைக்காக கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் நாய்களுக்கான கீழ்படிதல் போட்டிகள் நடத்தப்பட்டன.
 இதில் காவல் துறை, ரயில்வே காவல் துறை, தனியார் மோப்ப நாய்கள் உள்ளிட்டவை பங்கேற்றன.
 அதைத் தொடர்ந்து ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், லேப்ரடார், டால்மேசன், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கேரவன் ஹவுண்டு, பர்ஜாயா, பாக்ஸ் டெரியர், ராட்வீலர் உள்ளிட்ட ரகங்களுடன் மதுரையிலிருந்து ரஷியாவின் பர்úஸாய் ரக நாய் என மொத்தம் 45 இனங்களில் 346 நாய்கள் பங்கேற்றன.
 இந்த நாய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டன.
 இக்கண்காட்சியைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர்.
 நடப்பு ஆண்டில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் காரணமாக உதகையில் ரோஜா கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவியங்களுக்கான கண்காட்சி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
 இந்நிலையில், கோடை விழாவின் ஒரு பகுதியாக இல்லாமல் பொதுவாக நடத்தப்பட்ட நாய்கள் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com