குற்ற வழக்குகள் தொடர்வு துறை பதவி உயர்வு விவகாரம்: மனுதாரருக்கு அபராதம்

குற்ற வழக்குகள் தொடர்வு துறையில் கண்காணிப்பாளர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் தந்த மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகள் தொடர்வு துறையில் கண்காணிப்பாளர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் தந்த மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் மண்டல வருவாய் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். பின்னர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டேன். கடந்த 2007-ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றேன். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதால் தமிழ்நாடு குற்ற வழக்குகள் தொடர்வு துறை இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதே நேரத்தில் தான் ஏற்கெனவே சட்டப்படிப்பை முடித்துள்ளதால் குற்றவியல் நீதித்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சேகருக்கு தேர்வு எழுத விலக்கு அளித்தது. மேலும் அவருக்கு கண்காணிப்பாளர் பணி வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் தன்னை விட இளையவர்களுக்கு கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சேகர் தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.ஏழுமலை, மனுதாரரைக் காட்டிலும் 5 பேர் பணிமூப்பு அடிப்படையில் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகுதான் மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்க முடியும் எனக் கூறி பணி மூப்பு பட்டியலை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் அளித்த மனுதாரர் சேகருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்தத் தொகையை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com