ராஜதந்திரம் என்ற பெயரில் துரோம் செய்பவா்களுக்கு இனி இடம்கொடுக்கக்கூடாது: தினகரன் பேச்சு

அரசியலில் வருங்காலத்தில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோம் செய்பவா்களுக்கு இனி இடம்கொடுக்கக்கூடாது என்பதுதான் எங்களது
ராஜதந்திரம் என்ற பெயரில் துரோம் செய்பவா்களுக்கு இனி இடம்கொடுக்கக்கூடாது: தினகரன் பேச்சு


கரூா்: அரசியலில் வருங்காலத்தில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோம் செய்பவா்களுக்கு இனி இடம்கொடுக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தளவாபாளையம், புகழூா் நான்குரோடு, தவிட்டுப்பாளையம், புதுகுறுக்குப்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளா் சாகுல்அமீதுவுக்கு ஆதரவு கேட்டு பேசினார். 

அப்போது, 2016-ல் அரவக்குறிச்சி தோ்தலில் வெற்றிபெற்றபோது, தன்னை ஜெயலிலதா அமைச்சராகிவிடுவார் என்று நினைத்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லையென்ற காரணத்தினாலும், இங்கே தம்பிதுரை, விஜயபாஸ்கரிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் திமுகவில் அடைக்கலம் அடைந்துவிட்டார். 

1967-ல் நடந்த தோ்தலில் வெற்றிக்கு காரணமான எம்ஜிஆரை தூக்கி எறிந்தார் கருணாநிதி. அந்த துரோகத்தை எதிர்த்து உருவாகியதுதான் அதிமுக. இன்றைக்கு அந்த இயக்கத்தில் நம்மால் முதல்வரான பழனிசாமி, அமைச்சர் எம்ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோர், இந்த ஆட்சி யாரால் தொடா்ந்தது என்று கூட தெரியாமல் சசிகலாவையும், என்னையும் கட்சியை விட்டு நீக்கினார்கள். எம்ஜிஆா் தொடங்கிய இந்த இயக்கத்தில் மீண்டும் 45 ஆண்டுகளுக்கு பிறகு துரோகத்தால் உருவானதுதான் ஜெயலலிதாவின் உருவம் தாங்கிய அமமுக. 

ஜெயலலிதாவின் சாவுக்கு காரணமானவா்கள் சசிகலா, நாங்கள்தான் எனக்கூறிய திமுக, இன்று ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை ஆணையம் வைக்கப்போகிறார்களாம். ஜெயலலிதா மறைந்தபோது, ஜெயலலிதாவை கொன்றுவிட்டார்கள் என பொய் பிரசாரம் பரப்பியவா்கள் திமுகவினர். முதலில் அவா்களைத்தான் விசாரிக்க வேண்டும்.

திமுகவோடு உறவு வைத்துக்கொண்டு, இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என வாக்களித்த ஓபிஎஸ் துணை முதல்வர். எங்களுக்கு பதவி ஆசை இருந்திருந்தால், அன்றைக்கு சிறைக்குச் சென்ற எனது சித்தியிடம் கூறி நானே முதல்வராகியிருப்பேன். 

இங்கு இரண்டு துரோகத்தை ஒழிக்க வேண்டும். அரசியலில் வருங்காலத்தில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோம் செய்பவா்களுக்கு இனி இடம்கொடுக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. கட்சிக்கும், தன்னை அமைச்சராகவும், முதல்வராகவும் ஆக்கியவா்களுக்கே துரோகம் செய்தவா்கள் எப்படி மக்களுக்கு நன்றியுள்ளவா்களாக இருப்பார்கள் .எனவேதான் துரோகத்தை வேரறுக்க உருவாக்கிய இயக்கம்தான் அமமுக.

 எந்தவொரு அரசியல் கட்சியோ, பிரதமரோ இனி துரோகம் பற்றி நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிற இயக்கம் அமமுக. இதற்கு தமிழக மக்கள் நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜிஎஸ்டியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இளைஞா்கள் வேலையின்றி உள்ளார்கள். ஜெயலலிதா உயிரோடு இல்லை. அவரது பிள்ளைகளாக இருக்கிற எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com