கோடையில் இலவச இணைப்பாகும் லோ ஓல்டேஜ் எனும் பெருங்கொடுமை!

மழைக் காலத்தில் போக்குவரத்து நெரிசல், தொற்று நோய் போன்ற இலவச இணைப்புகளைப் போல வெயில் காலத்தில் மின் தடை, லோ ஓல்டேஜ் போன்றவை இணைந்து கொள்கின்றன.
கோடையில் இலவச இணைப்பாகும் லோ ஓல்டேஜ் எனும் பெருங்கொடுமை!


சென்னை: மழைக் காலத்தில் போக்குவரத்து நெரிசல், தொற்று நோய் போன்ற இலவச இணைப்புகளைப் போல வெயில் காலத்தில் மின் தடை, லோ ஓல்டேஜ் போன்றவை இணைந்து கொள்கின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளில் லோ ஓல்டேஜ், சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை என மக்கள் பல வகைகளில் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

இது குறித்து மக்கள் கூறுவது என்னவென்றால், தற்போதெல்லாம் மின் தடை ஏற்பட்டாலும், உடனே மின்சாரம் வந்து விடுகிறது. ஆனால், இரவில் அனைத்து வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் லோ ஓல்டேஜ் பிரச்னை ஆரம்பித்துவிடுகிறது என்கிறார்கள்.

ஒரு சில பகுதிகளில் லோ ஓல்டேஜ் பிரச்னையால் குடிநீர் மோட்டார்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் குடிநீர் மற்றும் வீடுகளுக்கான அடிப்படை தண்ணீர் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது பற்றி மக்களின் ஒரு சில கருத்துகள்..

எங்கள் வீட்டில் கேமரா ஏதேனும் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. வேலையெல்லாம் முடித்து உறங்கப் போகலாம் என்று நினைத்த உடனேயே மின் தடை ஏற்பட்டுவிடும். சில சமயங்களில் 15 நிமிடத்திலேயே வந்துவிடும். சில சமயம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் கூட ஆகிவிடும் என்கிறார்கள்.

சிலர் சொல்வது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. முதலில் லோ ஓல்டேஜ் ஏற்படுகிறது. அப்போதே நாங்கள் மின் தடையை எதிர்கொள்ளத் தேவையான விஷயங்களை செய்து வைத்துக் கொள்வோம். சரியாக மின்சாரம் துண்டிக்கப்படும். இது வாடிக்கையான விஷயமாகிவிட்டது என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com