3-ஆவது அணியா? ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பு

பாஜக, காங்கிரஸ் அல்லாமல் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சிஅமைப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா
தன்னைச் சந்திக்க வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கருணாநிதியின் சிறிய மார்பளவு வெண்கலச் சிலையைப் பரிசாகத் தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தன்னைச் சந்திக்க வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கருணாநிதியின் சிறிய மார்பளவு வெண்கலச் சிலையைப் பரிசாகத் தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


பாஜக, காங்கிரஸ் அல்லாமல் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சிஅமைப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை மாலை  வந்தார். 
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினோத்குமார், சந்தோஷ்குமார் ஆகியோரும் வந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 
தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், தேர்தலுக்குப் பிறகு ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் இந்த ஆலோசனையில் இடம்பெற்றனர்.
அதன் பிறகு,  சந்திரசேகர ராவ் செய்தியாளர்களைச் சந்திக்காமல் ஸ்டாலின் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.  இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சந்திரசேகர ராவ் முயற்சி: மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த சந்திரசேகர ராவ். அந்த ஆதரவு நிலைப்பாட்டைக் கைவிட்டு தற்போது பாஜக - காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில்  ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினைத் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com