திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதால் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு


வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதால் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது. மேலும், ஒவ்வொரு கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் தங்களின் பலத்தை நிரூபிக்க பணம் கொடுத்து மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். இதற்காக மட்டும் முக்கிய கட்சிகள் இதுவரை ரூ.25 கோடி வரை செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக திமுக, அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை விநியோகிக்கப்படுகிறது. இத்தகையச் சூழலில் கட்சியினர் தேர்தல் செலவு கணக்கை பொய்யாக தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர். தேர்தல் ஆணையமும் கண்மூடித்தனமாக அதனை ஏற்றுக் கொள்கிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தி வைக்க அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com