பெரியாறு அணைக்குச் செல்ல 2 புதிய படகுகள் வாங்க முடிவு

தமிழக அதிகாரிகள் பெரியாறு அணைக்குச் செல்ல 2 புதிய படகுகள் வாங்க முடிவு செய்துள்ளனர். 
தேக்கடி ஏரியில் தகுதிச் சான்று பெறுவதற்காக, பழுது பார்க்கப்படும் ஜலரத்னா படகு.
தேக்கடி ஏரியில் தகுதிச் சான்று பெறுவதற்காக, பழுது பார்க்கப்படும் ஜலரத்னா படகு.


தமிழக அதிகாரிகள் பெரியாறு அணைக்குச் செல்ல 2 புதிய படகுகள் வாங்க முடிவு செய்துள்ளனர். 
தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு ஆய்வுக்குச் செல்வதற்காக  கண்ணகி, ஜலரத்னா ஆகிய  இரண்டு படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த பழைய படகுகளை மாற்ற முடிவு செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரூ. 1.10 கோடியில்  200 ஹெச்.பி.  இழு விசைத் திறனுடன் இரட்டை என்ஜின் கொண்ட ஸ்டீல் படகு மற்றும் 89 ஹெச்.பி இழு விசைத்திறனுடன் இரட்டை என்ஜின் கொண்ட பைபர் படகு வாங்கப்பட்டது.
2014 -இல் தேக்கடிக்கு கொண்டுவரப்பட்ட முதல் படகில் அதிக இழு விசை உள்ளதாகக்கூறி, இப்படகை    இயக்குவதற்கு கேரள அரசு அனுமதி தர மறுத்ததால்,  கடந்த 5  ஆண்டுகளாக தேக்கடி ஏரி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 
இரண்டாவது படகு மேட்டூர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டது.  அதிக இழுவைத் திறன் கொண்ட படகுகளை இயக்க கேரள அரசு அனுமதி தர மறுத்துள்ள நிலையில், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கண்ணகி, ஜலரத்னா படகுகளைப் போல் 27 ஹெச்.பி. இழு விசைத்திறன் கொண்ட  இரண்டு புதிய  படகுகளை வாங்க தமிழக பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.ஏற்கெனவே, ரூ.1.10 
கோடியில் வாங்கிப் பயணின்றி  படகுகள் வீணாகிப் போன நிலையில், மீண்டும் கோடிக்கணக்கில்  செலவு செய்து படகுகளை வாங்க  உள்ளது 5 மாவட்ட மக்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறியது: தற்போது இயக்கப்படும் கண்ணகி , ஜலரத்னா படகுகள் தகுதிச் சான்று பெற உள்ளன. இதில் ஏதேனும் குறைகள் இருப்பது தெரிய வந்தால் மட்டுமே புதிய படகுகள் வாங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com