குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை தேவை: மார்க்சிஸ்ட் தீர்மானம்

மாநிலம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ளது.


மாநிலம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள்,  மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்.
கிராமப்புற பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதை மேம்படுத்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துவதோடு, அதற்கான கூலியை ரூ. 300 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்தத் திட்டத்தின் பேரழிவு குறித்து மக்களிடையே விளக்குவதற்காக விழிப்புணர்வு பிரசாரத்தை டெல்டா மாவட்டங்களில் ஜூன் 5 முதல் 10-ஆம் தேதி வரை மேற்கொள்வது  எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com