உள்மாவட்டங்களில் கனமழை, அனல் காற்று: ஆனா சென்னைக்கு மட்டும் இதுதான்?

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
உள்மாவட்டங்களில் கனமழை, அனல் காற்று: ஆனா சென்னைக்கு மட்டும் இதுதான்?

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக் கூடும்.

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளாதாகவும், சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com