தங்கம் பவுனுக்கு ரூ.32 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32  உயர்ந்து, ரூ.24,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32  உயர்ந்து, ரூ.24,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணக்கப்படுகிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணதங்கம் ஒரு கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.3,020-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 பைசா உயர்ந்து, ரூ.39.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.39,200 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,020
1 பவுன் தங்கம்    24,160
1 கிராம் வெள்ளி    39.20
1 கிலோ வெள்ளி    39,200
திங்கள்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,016
1 பவுன் தங்கம்      24,128
1 கிராம் வெள்ளி      39.10
1 கிலோ வெள்ளி    39,100
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com