கோவிந்தா செயலி விரைவில் ஐ-போனில் பதிவிறக்கம்

கோவிந்தா செல்லிடப்பேசி செயலி விரைவில் ஐ-போனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
கோவிந்தா செயலி விரைவில் ஐ-போனில் பதிவிறக்கம்


கோவிந்தா செல்லிடப்பேசி செயலி விரைவில் ஐ-போனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 விரைவு தரிசனம், உண்டியல் காணிக்கை செலுத்துதல், நன்கொடை வழங்குதல், வாடகை அறை முன்பதிவு உள்ளிட்டவற்றை செல்லிடப்பேசி மூலம் முன்பதிவு செய்ய கோவிந்தா என்ற செயலியை உருவாக்கியது.

இதன் மூலம் தற்போது மக்கள் எளிதாக தங்களின் பணிகளை செய்து வருகின்றனர். தற்போது இந்த செயலியை ஐ-போனிலும் பதவிறக்கம் செய்து பயன்படுத்தும் விதத்தில் தொழில்நுட்பம் மாற்றப்பட்டு வருகிறது. 

விரைவில் ஐ-போனிலும் கோவிந்தா செயலியை பக்தர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com