தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: உயிரிழந்தோருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு. 
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களிலும் என 15 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்நிலையில், அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக :  கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. பங்கேற்று,  உயிரிழந்தோரின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்:  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அனுமதி பெற்று,   தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன், மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்க நிர்வாகி பா. விநாயகமூர்த்தி, நாட்டுப் படகு மீனவர்கள் சங்கத் தலைவர் கயஸ், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆர்தர் மச்சாது, சகாயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தேசிய கொற்றம் அமைப்பு: தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கொற்றத்தின் தலைவர் 
அ. வியனரசு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு பங்கேற்று, உயிரிழந்தோரின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மதிமுக: தூத்துக்குடியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலர் மல்லை சத்யா சிறப்புரையாற்றினார். 
அமமுக: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலர் இரா. ஹென்றி தாமஸ் தலைமையில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
மார்க்சிஸ்ட்: தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  போராட்டத்தில் இறந்தோரின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜுனன் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் சந்தனசேகர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடைப்பயிற்சி மேற்கொண்டோர் அஞ்சலி: தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இதேபோல, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் தமிழ்மாந்தன், ஓட்டப்பிடாரம் சுயேச்சை வேட்பாளர் அக்ரி பரமசிவன் ஆகியோர் ஜார்ஜ் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மாணவி ஸ்னோலின் கல்லறையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஆண்டு எதிர்ப்புப் போராட்டம் நிகழ்ந்த இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com