நாங்குநேரியில் போட்டியிடப் போவது திமுகவா, காங்கிரஸா?

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அங்கு போட்டியிடப் போவது திமுகவா, காங்கிரஸா என்ற கேள்வி எழுந்துள்ளது.


நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் அங்கு போட்டியிடப் போவது திமுகவா, காங்கிரஸா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றுள்ளார். அதனால், நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை மே 29-ஆம் தேதி ராஜிநாமா செய்ய உள்ளார். இந்த நிலையில், நாங்குநேரி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, அதில் இடைத்தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணியில் யார் போட்டியிடப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பொதுவாக கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், அந்தக் கட்சியின் சார்பிலேயே மீண்டும் வேட்பாளர் நிறுத்தப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால், 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சோளிங்கர், ஓசூர், சூலூர் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு தோற்ற தொகுதிகள் என்றாலும், சட்டப்பேரவையில் திமுக பலம் பெற வேண்டும், ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சம்மதத்துடன் இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிட்டது.
22 தொகுதிகளில் 13 தொகுதிகளைத் திமுக கைப்பற்றியுள்ளது. பேரவையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் பலமும் 109-ஆக உயர்ந்துள்ளது. அதனால், நாங்குநேரி இடைத்தேர்தலிலும் திமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் அக் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம், நாங்குநேரி தாங்கள் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அங்கு காங்கிரúஸ போட்டியிட வேண்டும் என்று அக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 
எச்.வசந்தகுமார் ராஜிநாமா செய்த பிறகு, இதுகுறித்து இரு கட்சியினரும் பேச உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com