வாக்குப்பதிவின்போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வாக்குப்பதிவின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


வாக்குப்பதிவின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
வேலூர் மாவட்டம் அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த துளசியம்மாள், வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தபோது, அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், வாக்களிக்க வரிசையில் நின்றபோது, மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் கிராமத்தைச் சேர்ந்த செண்டு, புதுக்கோட்டை குருங்களூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, கோவை மாவட்டம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அய்யம்மாள், சேலம் மாவட்டம் வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், மதுரை மாவட்டம் உட்கடை துரைச்சாமிபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பிள்ளை, சேலம் மாவட்டம் ஆவடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் ஆகியோரும் வாக்களிக்க வரிசையில் நின்றபோது மயக்கமடைந்து உயிரிழந்தனர்.  
உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com