ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் முழக்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி வலியுறுத்தினர். 
கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பிய விவசாயிகள்.
கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பிய விவசாயிகள்.


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி வலியுறுத்தினர். 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புப் பட்டை அணிந்திருந்தனர். இதையடுத்து, கூட்டம் தொடங்கியதும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன், தமிழகத்தில் மரக்காணம் தொடங்கி கோடியக்காடு வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, விவசாயத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று தடை விதித்திருந்தார். தமிழக அரசு அந்த தடையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். 
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக விவசாயிகளின் கருத்தைக்கேட்டு அத்திட்டத்தை கைவிட வேண்டும், டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் காக்க வேண்டும் எனும் தீர்மானத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். 
தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி.எஸ். மாசிலாமணி பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனும் தீர்மானத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். பின்னர் தீர்மானங்களை வலியுறுத்தி, கூட்டரங்கில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com