திருச்சியில் அடுத்த அதிர்ச்சி: கூட்டுறவு வங்கியில் ரூ. 1.5 கோடி கொள்ளை

திருச்சியில் சமீபகாலமாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக தற்போது கூட்டுறவு வங்கியில் ரூ. 1.5 கோடி திருடப்பட்டுள்ளது. 
திருச்சியில் அடுத்த அதிர்ச்சி: கூட்டுறவு வங்கியில் ரூ. 1.5 கோடி கொள்ளை

திருச்சியில் சமீபகாலமாக நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக தற்போது கூட்டுறவு வங்கியில் ரூ. 1.5 கோடி திருடப்பட்டுள்ளது.  

திருச்சி திருவெறும்பூரில் பெல் நிறுவன ஆளை வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ. 1.5 கோடி ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதற்குப் பதிலாக அங்குள்ள மேஜையின் மீது அந்தப் பணம் வைக்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

அதில் முகமுடி மற்றும் கையுறை அணிந்த மர்ம நபர் மேஜையின் மீதிருந்த அந்தப் பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் 10 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சியை மையமிட்டு நடக்கும் தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரபல நகைக் கடை, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றிந் வரிசையில் அடுத்த அதிர்ச்சிக்குரிய சம்பவமாக கூட்டுறவு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com