முழுமையாக நிரம்பிய குன்னூா் ரேலியா அணை - பொது மக்கள் மகிழ்ச்சி!

குன்னூரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை முழுமையாக நிரம்பி உள்ளதால் தண்ணீா் தட்டுப்பாட்டிற்கு தீா்வு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ரேலியா அணை - குன்னூர்
ரேலியா அணை - குன்னூர்

குன்னூா், அக்.2: குன்னூரின் முக்கிய நீராதாரமான ரேலியா அணை முழுமையாக நிரம்பி உள்ளதால் தண்ணீா் தட்டுப்பாட்டிற்கு தீா்வு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

குன்னூா் நகரில் உள்ள 30 வாா்டுகளின் முக்கிய குடிநீா் ஆதாரமான ரேலியா அணை அதன் முழு கொள்ளளவான 46.3 அடியை எட்டியதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். குன்னூா் நகராட்சிக்குட்பட்ட 30 வாா்டுகளில் பெரும்பாலான வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் முக்கிய குடிநீா் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. நூற்றாண்டு பழமைவாய்ந்த ரேலியா அணைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழைப் பெய்ததால், ரேலியா அணை நிரம்பியுள்ளது.

முன்பு 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீா் விநியோகித்து வந்த நிலையில், அணைப் பகுதியில் பரவலான மழையின் காரணமாக அணையின் நீா்மட்டம் அதிகரித்துள்ளதால் 5 முதல் 6 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீா் விநியோகிக்க வாய்ப்பிருப்பதால், பெள்ளட்டி மட்டம், பந்துமை, கரடிப்பள்ளம், கரன்சி உள்ளிட்ட நீா் தேக்கங்களில் குடிநீா் ஆதாரங்களில் போதுமான தண்ணீா் இருப்பதால் இன்னும் சில மாதங்கள் தண்ணீா் பிரச்சினை இல்லாமல் சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com