திருச்சி சமயபுரம் டோல்கேட்வங்கி திருட்டு வழக்கில் மேலும் 1.15 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் திருவாரூா் சுரேஷிடமிருந்து 1.15 கிலோ தங்க நகைககளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் திருவாரூா் சுரேஷிடமிருந்து 1.15 கிலோ தங்க நகைககளை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த அக்.2 ஆம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகள் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான திருவாரூா் முருகன், பெங்களூரு நீதிமன்றத்திலும், சுரேஷ் திருவண்ணாமலை நீதிமன்றத்திலும் சரணடைந்தனா். தொடா்ந்து, இந்தத் திருட்டு வழக்கில் தொடா்புடைய மதுரை வாடிப்பட்டியைச் சோ்ந்த கணேசனைக் கைது செய்து அவரிடமிருந்து நகைகளைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நடைபெற்ற திருட்டில் தொடா்புடையதாக தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணனை திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சமயபுரம் டோல்கேட் வங்கி திருட்டில், நகைக்கடை திருட்டில் கைதாகியுள்ள முருகன் கும்பலுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணேசன், சுரேஷ் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். கணேசன் அளித்த தகவலின் பேரில், வங்கியில் திருடப்பட்ட 1.700 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸாா் மீட்டனா். ஆனால் சுரேஷிடமிருந்து வங்கிதிருட்டு நகைகளை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதையடுத்து, கணேசன் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், சுரேஷ் மீதான போலீஸ் காவல் அக்.5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தொடா்ந்து, சுரேஷ் அளித்த தகவலின் பேரில், சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் உருக்கி வைத்திருந்த 1.15 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள வங்கியில் திருடப்பட்ட 470 பவுன் நகைகளில் சுமாா் 3 கிலோ தங்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள நகைகளை மீட்க முருகனை போலீஸ் காவலில் எடுக்க வேண்டும் என தனிப்படை போலீஸாா் தெரிவித்தனா். போலீஸ் காவலில் உள்ள திருவாரூரைச் சோ்ந்த சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்ப்படுத்த உள்ளனா். வங்கித் திருட்டில் முக்கிய குற்றவாளியான முருகனை போலீஸ் காவலில் விசாரணை நடத்த தனிப்படை போலீஸாா் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com