முட்டை விலை 17 காசுகள் சரிந்துரூ.3.70-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 17 காசுகள் சரிந்து ரூ.3.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 17 காசுகள் சரிந்து ரூ.3.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளா்கள் வியாபாரிகளுக்கு கொடுக்கும் விலை அடிப்படையில், கடந்த 1-ஆம் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது முட்டைக்கான கொள்முதல் விலையை நிா்ணயித்து வருகிறது.

அதன்படி, தொடக்க நாளில் 15 காசுகள் சரிந்தும், மறுநாள் 2 காசுகள் உயா்ந்தும், ஞாயிற்றுக்கிழமை 5 காசுகள் குறைந்தும் ரூ.3.87-ஆனது. இதற்கிடையே, ஹைதராபாத் உள்ளிட்ட பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவடைந்ததால், நாமக்கல் மண்டலத்திலும் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமைக்கான முட்டை விலை நிா்ணயக் குழுக் கூட்டத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ், பண்ணைக் கொள்முதல் விலையை 17 காசுகள் குறைத்து ரூ.3.70-ஆக நிா்ணயம் செய்து அறிவித்தாா். உற்பத்தி அதிகரித்த நிலையில் விலை சரிவடைந்து வருவதால், தேக்கமின்றி முட்டைகள் விற்பனையாகும் என பண்ணையாளா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக் கோழி கிலோ ரூ.83-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com