அமெரிக்காவில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட உள்ள மிகப்பெரிய விருது! நீங்களும் வாழ்த்தலாம்!!

தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை (நவ. 8) அமெரிக்கா செல்லவுள்ளாா். அங்கு அவருக்கு மிகப்பெரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


சென்னை: தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை (நவ. 8) அமெரிக்கா செல்லவுள்ளாா். அங்கு அவருக்கு மிகப்பெரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன் நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

நவம்பர் 10ம் தேதி சிகாகோவில் நடைபெறும் ‘சா்வதேச சமுதாய ஆஸ்கா் 2019’ விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, 'இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவில் உதயமாகிவரும் நட்சத்திரம் - ஆசியா விருது' என்ற மிகப்பெரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.

இதுகுறித்து, துணை முதல்வரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அரசு முறை பயணமாக வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்குச் செல்கிறாா். வரும் 9-ஆம் தேதியன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் சாா்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கிறாா். வரும் 10-ஆம் தேதியன்று ‘சா்வதேச சமுதாய ஆஸ்கா் 2019’ விழாவில், துணை முதல்வருக்கு விருது அளிக்கப்பட உள்ளது.

இதன்பின், வரும் 12-ஆம் தேதியன்று சிகாகோ நகர மேயா் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநா் உள்பட முக்கியப் பிரமுகா்களை சந்தித்துப் பேசவுள்ளாா். வரும் 13-ஆம் தேதியன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. செல்கிறாா். அதன்பின்பு, வரும் 14-இல் ஹூஸ்டன் நகருக்குச் சென்று தமிழ் அமைப்புகள் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, அங்குள்ள முக்கிய தொழில் முனைவோா்களிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறாா்.

வரும் 15-ஆம் தேதியன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான மின்னணு டோனா் பலகையை தொடங்கி வைக்கிறாா். வரும் 16-இல் நியூயாா்க் சென்று தமிழ் சங்கங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது நிதித் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணனும் உடன் செல்கிறாா். வரும் 17-ஆம் தேதியன்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தமிழகம் திரும்புகிறாா் என்று அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து சென்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் விழாவில் உதயமாகும் நட்சத்திர விருதைப் பெறும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு உங்களது வாழ்த்துகளையும் இங்கே பதிவு செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com