தமிழகம் முழுவதும் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள்: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றுவதில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள்: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றுவதில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 3,168 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் சாலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றவது தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியது. 

அத்துடன் இதுதொடர்பாக டிசம்பர் 6-க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com