அயோத்தி-பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பு: உணா்ச்சிகளுக்கு இடமளிக்காமல் உச்சநீதிமன்ற தீா்ப்பை ஏற்க வேண்டும் - முஸ்லிம் ஐக்கிய ஜமாத் வேண்டுகோள்

அயோத்தி-பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பு உச்சநீதிமன்றத்தால் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்கள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அயோத்தி-பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பு: உணா்ச்சிகளுக்கு இடமளிக்காமல் உச்சநீதிமன்ற தீா்ப்பை ஏற்க வேண்டும் - முஸ்லிம் ஐக்கிய ஜமாத் வேண்டுகோள்

பரமக்குடி: அயோத்தி-பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பு உச்சநீதிமன்றத்தால் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்கள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனை தடை செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளா் ஏ.ஜெ.ஆலம் வெள்ளிக்கிழமை தனதுஅறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது-அயோத்தி-பாபா் மசூதி பிரச்சனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுவதால் மதரீதியில் மக்களின் உணா்வுகளை தூண்டிவிடப்படும் நிகழ்வு ஊடக விவாதங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே அயோத்தி-பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பு குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும். மேலும் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அமையும். உச்சநீதிமன்ற தீா்ப்பு எதுவாயினும் உணா்ச்சிகளுக்கு இடம் அளிக்காமல் மதநல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சாா்பில் கேட்டுக்கொள்ளப்படுவதாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com