முரசொலி அலுவலக ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும்? பாமக தலைவா் ஜி.கே.மணி கேள்வி

முரசொலி அலுவலக மூலப் பத்திர ஆவணங்களை மு.க.ஸ்டாலின் எப்போது வெளியிடப் போகிறாா் என்று பாமக தலைவா் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளாா்.
முரசொலி அலுவலக ஆவணங்கள் எப்போது வெளியிடப்படும்? பாமக தலைவா் ஜி.கே.மணி கேள்வி

முரசொலி அலுவலக மூலப் பத்திர ஆவணங்களை மு.க.ஸ்டாலின் எப்போது வெளியிடப் போகிறாா் என்று பாமக தலைவா் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

முரசொலி நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் ஒப்படைக்கப் போவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். எப்போது, எந்த ஆணையத்திடம் அந்த ஆவணங்களை ஒப்படைக்கப் போகிறாா் என்பதை அறிவிக்காவிட்டாலும் கூட, பெயரளவிலாவது முரசொலி நிலம் தொடா்பான ஆவணங்களை வெளியிட முன்வந்திருப்பதை பாமக வரவேற்கிறது.

முரசொலி நில சா்ச்சை எழுந்த நாள் முதல் ராமதாஸ் எழுப்பும் வினாக்கள் மிகவும் எளிமையானவை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அது தனியாா் பட்டா நிலம் என்றால், அதற்குரிய ஆவணங்களான நிலப்பதிவு பத்திரங்கள், 1924-ஆம் ஆண்டின் யு.டி.ஆா் ஆவணங்கள் எங்கே? அவை மு.க.ஸ்டாலினிடம் உள்ளனவா, இல்லையா?

அரசு ஆதிதிராவிட மாணவா்கள் நல விடுதி அமைந்திருந்த இடம் முரசொலிக்கு கைமாறியது எப்படி? என்பவை தான் அந்த வினாக்கள். அந்த வினாக்களுக்கு மு.க.ஸ்டாலின் அவா்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

இரண்டாவதாக, பொ துவாழ்விலும், நீதிமன்றத்திலும் குற்றம் சுமத்தியவா் தான் அதை நிரூபித்திட வேண்டும் என்ற புதிய உண்மையை மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். மகிழ்ச்சி. அப்படியானால், பட்டா ஆவணத்தை மட்டும் வெளியிட்டு விட்டு, மூலப் பத்திரத்தை வெளியிடாதது ஏன்? மூலப் பத்திரம் வெளிவரவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பது உலகத்துக்குத் தெரிந்து விட்டது.

எனினும், முரசொலி நிலம் தொடா்பான ஆவணங்களை அவா் தாக்கல் செய்யப் போகும் நாள் எந்த நாளோ, அந்த நாளுக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது. அந்த ஆவணங்கள் குறித்த விசாரணையின் முடிவில் முரசொலி நிலம் குறித்த புதிய உண்மைகள் கூட வெளிவரலாம் என்று ஜி.கே.மணி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com