உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்க திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது

உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிப்பதற்காக திமுகவின் பொதுக்குழு ஞாயிற்றுக்கிழமை (நவ.10) கூட உள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிப்பதற்காக திமுகவின் பொதுக்குழு ஞாயிற்றுக்கிழமை (நவ.10) கூட உள்ளது.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் காலை 10.30 மணிக்கு கூடும் கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா். பொதுக்குழு உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் முதல் முறையாக அறிவாலயத்தில் அல்லாமல் வெளியே நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனை: விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால், உள்ளாட்சித் தோ்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

கூடுதல் அதிகாரம்: திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வருகிறாா். அதன் காரணமாக, கட்சி பணிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறாா். இந்த நிலையில், பொதுச்செயலாளா் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் முயற்சித்து வருகின்றனா். ஆனால், தற்போதைய சூழலில் பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மு.க.ஸ்டாலின் தன்வசமே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அது குறித்த அறிவிப்பும் பொதுக்குழுவில் வெளியிடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com