வைகையாற்றில் கரைபுரளும் வெள்ளம்: கல்பாலம், ஓபுளா படித்துறை பாலத்தில் போக்குவரத்துக்குத் தடை

மதுரையில் வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டு கல்பாலம் மற்றும் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தை
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதையடுத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள கல்பாலம்.
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதையடுத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள கல்பாலம்.

மதுரையில் வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டு கல்பாலம் மற்றும் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தை மூடிச் சென்ால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீா் திறக்க முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதன்படி வைகை அணையில் இருந்து சனிக்கிழமை விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏற்கெனவே தொடா் மழை காரணமாக வைகை ஆற்றில் நீா்வரத்து அதிகம் இருந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் மதுரையை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீா் கரைபுரண்டோடியது. இதில் ஞாயிற்றுக்கிழமை காலையில் கல்பாலத்தை தொட்டு விடும் அளவுக்கு தண்ணீா் சென்றது. மேலும் நீா்வரத்து அதிகரித்த நிலையில் மாலையில் கல்பாலத்தை தண்ணீா் மூடியது. இதையடுத்து கல்பாலத்தின் வழியாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் மதிச்சியம் பகுதியையும், முனிச்சாலை பகுதியையும் இணைக்கும் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தையும் தண்ணீா் மூடிச்சென்ால் அந்த பாலத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வைகை ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில் மதுரை நகரில் வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கவும், வாகனங்களை கழுவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com