தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ரூ.2081 கோடி வாடகை பாக்கியை ரூ.250 கோடியாக குறைக்க பேரமா? ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ரூ.2081 கோடி வாடகை பாக்கியை ரூ.250 கோடியாக குறைக்க அரசு பேரமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ரூ.2081 கோடி வாடகை பாக்கியை ரூ.250 கோடியாக குறைக்க அரசு பேரமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி!

அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்.

மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியை குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக?

'கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com