பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பும் முடிந்த பிறகும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் நேரம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பும் முடிந்த பிறகும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் நேரம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், '5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கே. இதனால் மாணவர்களுக்கு கல்வி இடைநிற்றல் ஏற்படாது. 5 மற்றும்  8-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கேள்விகள் எளிதாகவே இருக்கும். ஒரு மாணவரின் கல்வித்திறன் எப்படி இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்காகவே தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களை கஷ்டப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. மேலும்,  5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 

மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பும் முடிந்த பிறகு, மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்தும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், குழந்தைகள் சரியான நேரத்திற்கு தண்ணீர் அருந்துவதை பழக்கப்படுத்தவும் இந்த முறை பின்பற்றப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்படும்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com