பழுப்பு நிலக்கரி படிமம் ஆய்வு: என்எல்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக என்எல்சி இந்தியா நிறுவனமும், மத்திய கனிம வளம் கண்டறியும் நிறுவனமும் சனிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன. 
நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்ட என்எல்சி சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் செüக்கி,
நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்ட என்எல்சி சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் செüக்கி,

நெய்வேலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக என்எல்சி இந்தியா நிறுவனமும், மத்திய கனிம வளம் கண்டறியும் நிறுவனமும் சனிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன. 
இந்தியாவின் பழுப்பு நிலக்கரி வளங்கள் குறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் இலக்குகளை எட்டுவதற்காக இந்த ஆய்வுப் பணிகளை, வெளி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள என்எல்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் பாண்டியூர், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பழுப்பு நிலக்கரி வளங்களை 2019}20}ஆம் நிதியாண்டில் ஆய்வு செய்ய மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதுதொடர்பாக கடந்த மே 13}ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் கனிம வளங்களைக் கண்டறியும் நிறுவனம் முன்வந்த நிலையில், அதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் முன்னிலையில், அந்த நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் செüக்கி, கனிம வளங்களைக் கண்டறியும் நிறுவனத் தலைவர் ரஞ்சித் ரத் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்வில், என்எல்சி இயக்குநர்கள் ஆர்.விக்ரமன், நாதள்ள நாத மகேஷ்வர்ராவ், ஷாஜி ஜான், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன், நிலயியல் துறை தலைமைப் பொதுமேலாளர் டி.கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்கட்ட ஆய்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாண்டியூர் பகுதியில் மொத்தம் சுமார் 48 ஆயிரம் மீட்டரும், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஏ, பி, சி, டி பிரிவுகளில் சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் மீட்டரும் துளையிட்டு ஆய்வு செய்ய என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு கருத்துரு அனுப்பியது. இந்த நிலையில், முதல்கட்டமாக, 2019}20}ஆம் நிதியாண்டில், பாண்டியூரில் 5 ஆயிரம் மீட்டரும், ஆர்.எஸ்.மங்கலத்தின் "ஏ' பிரிவு பகுதியில் 30 ஆயிரம் மீட்டரும் துளையிட்டு  ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய நிலக்கரி அமைச்சம் அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி, இந்தப் பணிகள் என்எல்சி இந்தியா நிறுவன நிலவியல் துறையின் வழிகாட்டுதலின்படி, கனிமங்களைக் கண்டறியும் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளய. அடுத்து வரும் ஆண்டுகளில் நிலக்கரி அமைச்சகத்தின் அனுமதியுடன் எஞ்சிய பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com