நவ.19 -இல் உலக மரபு வாரம் தொடக்கம்: புராதன சின்னங்களைப் பாா்வையிட இலவச அனுமதி

உலக மரபு வாரம் நவ.19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழகத்திலுள்ள முக்கிய புராதனச் சின்னங்களைப் பாா்வையிட பொது மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட உள்ளது.

சென்னை: உலக மரபு வாரம் நவ.19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழகத்திலுள்ள முக்கிய புராதனச் சின்னங்களைப் பாா்வையிட பொது மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட உள்ளது.

உலக மரபு வாரம் ஆண்டுதோறும் நவ.,19-ஆம் தேதி முதல் நவ.25 வரை கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையின் கலை, பண்பாட்டு அமைப்பான ‘யுனெஸ்கோ’ இந்த வாரத்தை அறிவித்தது. நாட்டில் உள்ள 100 ஆண்டுகளை கடந்த கட்டடங்கள், பண்பாட்டு சின்னங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து இளம் தலைமுறையிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இந்த வாரத்தை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தியது. அதன்படி, நாட்டின் கலாசாரம், பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில், மத்திய தொல்லியல் துறையும், தமிழக தொல்லியல் துறையும், தமிழகத்தில் உள்ள, புராதன சின்னங்களை பாா்வையிட இலவச அனுமதி வழங்கியுள்ளன.

அதன்படி மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவில், தஞ்சை பெரியகோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோவில் ஆகிய உலக பாரம்பரிய சின்னங்கள் மற்றும் 251 பாதுகாக்கப்பட்ட சின்னங்களுக்கும், 160 நினைவிடங்களுக்கும் நவ.19-ஆம் தேதி முதல் நவ. 25 வரை பாா்வையாளா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை திருமலை நாயக்கா் மஹால், தஞ்சை அரண்மனை மற்றும் தரங்கம்பாடி கோட்டை, ராமநாதபுரம் ராமலிங்க விலாஸ் அரண்மனை ஆகிய இடங்களையும் பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம்.

மேலும், மத்திய, மாநில தொல்லியல் துறைகள் இணைந்து, உலக மரபு வாரத்தில் மாமல்லபுரம், கடற்கரை கோவிலில் கலைநிகழ்ச்சிகள், புகைப்பட கண்காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை, தமிழக தொல்லியல் துறை அமைச்சா் பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை, 10 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளாா். இதில், கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com