அது விமர்சனம் இல்லை..நிதர்சனம்: நண்பர் ரஜினிக்கு ஆதரவளித்த கமல்

முதல்வர் பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அவரது நண்பரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரஜினி - கமல்
ரஜினி - கமல்

சென்னை: முதல்வர் பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அவரது நண்பரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இதுவரை தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ , பத்மபூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஒதிஷாவிலுள்ள நாட்டின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகமான செஞ்சூரியன் சார்பில் செவ்வாயன்று  சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது .

நிகழ்வு முடிந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:

திறன் மேம்பாடு என்னும் விஷயத்தைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அப்படிப்பட்ட நிலையில் இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து எனக்கு டாகடர் பட்டம் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

மாநிலத்தின் நலம் கருதி நானும் ரஜினியும் சேர்ந்து செயல்பட வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக செயல்படுவோம். கொள்கை வேறுபாடு பற்றியெல்லா ம் அப்போது பேசிக் கொள்ளலாம்.

நாடுமுழுவதும் நிலவி வந்த மதம் தொடர்பான தர்க்கம் தற்போது கல்வி நிலையங்களுக்கு உள்ளேயும் நுழைந்திருப்பதையே மாணவி பாத்திமாவின் மரணம் காட்டுகிறது.

முதல்வர் பழனிசாமி குறித்து ரஜினிகாந்த பேசியது விமர்சனம் இல்லை..அது நிதர்சனம்.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com