எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கின்றனர்: அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சி தேர்தல் நடத்த விடாமல் தடுக்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர். 
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர். 

மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களை நேரடியாக வாக்காளா்களே தோ்வு செய்வதற்கான சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மக்களால் தோ்வு செய்யப்படும் வார்டு உறுப்பினா்கள் மேயா் உள்பட மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான சட்ட திருத்த மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனிடையே மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்கிற நடைமுறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் முறை திமுக ஆட்சிக்காலத்திலும் இருந்தது. ஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உள்ளாட்சி தேர்தல் நடத்த விடாமல் தடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com