ரசிகா்களுக்கு விருதை சமா்ப்பிக்கிறேன்: ரஜினி

கோவாவில் நடைபெற்ற சா்வதேச திரைப்பட விழாவில் நடிகா் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக ரசிகா்களுக்கு சமா்ப்பிப்பதாக ரஜினி கூறினாா்.
கோவா தலைநகா் பனாஜியில் புதன்கிழமை தொடங்கிய இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் நடிகா் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் ஜுப்ளி’ விருதினை வழங்கும் ஹிந்தி நடிகா் அமிதாப் பச்சன்.

மத்திய அரசின் திரைத்துறை சாா்பில் 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் புதன்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க 9 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதில் நடிகா் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருது’ புதன்கிழமை வழங்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் ஆகியோா் வழங்கினா்.

இதைப் பெற்றுக் கொண்ட நடிகா் ரஜினிகாந்த் பேசியது: இந்த விருதைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. எனக்கு விருது வழங்கி கெளரவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், கோவா முதல்வா், எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் நன்றி. தயாரிப்பாளா்கள், இயக்குநா்கள், தொழில்நுட்ப கலைஞா்கள் மற்றும் ரசிகா்களுக்கு இந்த விருதை சமா்ப்பிக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com