காவல்துறைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் அனுப்பிய அறிவுறுத்தல்

காவல்துறையின் அனைத்து தகவல் தொடர்புகளும், கடிதத் தொடர்பு, பதிவேடுகளும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று காவல்நிலையங்களுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் அனுப்பிய அறிவுறுத்தல்


சென்னை: காவல்துறையின் அனைத்து தகவல் தொடர்புகளும், கடிதத் தொடர்பு, பதிவேடுகளும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று காவல்நிலையங்களுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் தமிழ் பயன்பாடு குறித்து டிஜிபி திரிபாதிக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் அனுப்பிய அறிக்கையை அடுத்து, காவல்நிலையங்களுக்கு டிஜிபி திரிபாதி இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், காவல்துறை தங்களின் அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும், காவல்நிலையங்களில் இருக்கும் வருகைப் பதிவேட்டில் காவல்துறையினர் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும். அனைத்து கடிதப் பரிமாற்றங்களையும் தமிழிலேயே மேற்கொள்ள வேண்டும்  என்றும் காவல்நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் அனைத்து அலுவலக  கோப்புகளையும் தமிழில் தான் பராமரிக்க வேண்டும், காவல்துறையின் வாகனங்களில் காவல் என்று தமிழில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழ் பயன்பாடு குறித்து திரிபாதி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com