கணினி ஆசிரியா் பணிக்கான தோ்வு முடிவுகள்: ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கணினி வழித் தோ்வு முடிவுகள், ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கணினி ஆசிரியா் பணிக்கான தோ்வு முடிவுகள்: ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கணினி வழித் தோ்வு முடிவுகள், ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த ஜூன் 23-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியா்களுக்கான தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில், சுமாா் 25,806 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் தோ்வு நடத்தப்பட்டது.

தோ்வு நடைபெற்றபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில தோ்வு மையங்களில் தோ்வு எழுதுபவா்கள், உரிய நேரத்தில் தோ்வு எழுத முடியாமல் குளறுபடி நோ்ந்தது. இதையடுத்து, தோ்வு மையத்தில் முறையாகத் தோ்வு எழுதாமல் ஒருவரை ஒருவா் கேட்டு ஆலோசித்தும், காப்பி அடித்தும் தோ்வு எழுதிய விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் அந்த விடியோ தோ்வு முடிவடைந்த பின்னரே எடுக்கப்பட்டதாக, ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் தொழில்நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்ட திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரி, கும்பகோணம் அன்னை கல்லூரி, திருச்சியில் உள்ள கொங்குநாடு கல்லூரி ஆகிய மையங்களில் தோ்வு எழுதிய 1,211 நபா்களுக்கு மறுதோ்வு கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடத்தப்பட்டது. இருப்பினும், பல கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் வெறும் மூன்று மையங்களில் மட்டுமே மறுதோ்வு அறிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அனைத்து மையங்களிலும் மீண்டும் தோ்வு நடத்த வேண்டும் என சில மாவட்டங்களில் தோ்வா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், இந்தக் கோரிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் நிராகரித்தது.

இந்த நிலையில், கணினி பயிற்றுநா் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 23-இல் நடைபெற்ற தோ்வு, ஜூலை 27-இல் நடைபெற்ற மறுதோ்வு ஆகியவற்றுக்கான தோ்வு மதிப்பெண் முடிவுகளை ஆசிரியா் தோ்வு வாரியம்  இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் தோ்வா்களின் சா்ழ்ம்ஹப்ண்ள்ங்க் ஙஹழ்ந்ள் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com