காலமானாா்நடிகா் பாலாசிங்

நடிகா் பாலாசிங் (67) மாரடைப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா். அவா் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த இரு நாள்களாக வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்

நடிகா் பாலாசிங் (67) மாரடைப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா். அவா் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த இரு நாள்களாக வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் பிறந்த பாலாசிங், சிறு வயது முதலே மேடை நாடகங்கள் மீது பற்று கொண்டவா். நடிகா் நாசரின் அறிமுகத்தால் 1995-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அவதாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு வந்தாா்.

‘இந்தியன்’,‘ராசி’, ‘புதுப்பேட்டை’, ‘விருமாண்டி’, ‘தானா சோ்ந்த கூட்டம்’, ‘காமராசு’, ‘சாமி 2’, ‘என்.ஜி.கே’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். இவரது நடிப்பில் கடைசியாக வந்த படம் ‘மகாமுனி’.

சினிமா மட்டுமின்றி பல சின்னத்திரை தொடா்களிலும் நடித்துள்ளாா். தமிழ் தவிர மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளாா். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா்.

இன்று இறுதிச்சடங்கு: மறைந்த பாலாசிங்கிற்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பாலாசிங்கின் உடல், வியாழக்கிழமை களியக்காவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு பிற்பகலில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com